முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் தலைவர் எனக் கூற விஜய்க்கு தகுதியில்லை: ஆ. ராசா

முதல்வர் நாற்காலிக்கான மரியாதையை விஜய் குறைத்துக்கொள்ளக் கூடாது என ஆ. ராசா பேச்சு...

Updated On : 2 ஜூன் 2026, 5:34 pm IST
ஆ. ராசா
பகிர்:

தமிழ்நாட்டின் தலைவர் எனக் கூற முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு தகுதியில்லை என திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா இன்று (ஜூன் 2) குற்றச்சாட்டினார்.

மக்களுக்கு நன்றி சொல்லும் கூட்டத்தில் கூட விஜய் அரசியல் பேசியுள்ளதாகவும், முதல்வர் பதவிக்கு பொருத்தமாக விஜய் செயல்படவில்லை எனவும் விமர்சித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விஜய்யின் திருச்சி பேச்சு குறித்து ஆ. ராசா செய்தியாளர்களுடன் பேசியதாவது:

Advertisement

Advertisement

திருச்சியில் எள்ளலும் துள்ளலுமாக விஜய் பேசியுள்ளார். அவருக்கு வீர வசனம் எழுதித்தந்தது யார்? பிரதமர் மோடியை 10 நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார். அவருடன் என்ன பேசினார் என்பதைக் கூறாதது ஏன்?

மற்றவர்கள் எல்லாம் அல்லு சில்லு என்கிறார். ஆனால், அவர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களின் ஆதரவை வாங்கியது அரசியலா? திள்ளுமுள்ளா?

summary

Vijay lacks the qualification to claim the title of Tamil Nadu's leader: A. Raja alleges.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.