கர்நாடக முதல்வரான டி.கே. சிவகுமாருக்கு விஜய் வாழ்த்து!
கர்நாடகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவகுமாருக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து...
கர்நாடகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவகுமாருக்கு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா கடந்த மே 28 அன்று முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
கர்நாடகத்தின் துணை முதல்வராக இருந்த டி.கே. சிவகுமார் அம்மாநிலத்தின் புதிய முதல்வராக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, கர்நாடக ஆளுநர் மாளிகையில் இன்று (ஜூன் 3) மாலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமாருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
கர்நாடகத்தின் துணை முதல்வராக பரமேஸ்வரா பொறுப்பேற்றுக்கொண்டார். இவர்களுடன் 12 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே. சிவகுமாருக்கு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளதாவது:
''கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு.டி.கே. சிவகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.