FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

துறைமுகம், மெட்ரோ, கல்லூரி... நிதியமைச்சரிடம் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள்!

நிதியமைச்சரிடம் முதல்வர் விஜய் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து...

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதல்வர் சி. ஜோசப் விஜய் - எக்ஸ்
பகிர்:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 27) கோரிக்கையாக முன்வைத்துள்ளார்.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 4 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியதைத் தொடர்ந்து, அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனு முதல்வர் விஜய் வழங்கினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று (மே 27) புதுதில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

Advertisement

Advertisement

இச்சந்திப்பின்போது, விரைவான வளர்ச்சியைப் பெற்றுவரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்றும், இத்தகைய வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது இன்றியமையாதது என்பதால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டின் வலுவான கல்விச் சூழலை மேலும் வலுப்படுத்த, தேசிய கல்வி நிறுவனங்களை தமிழ்நாட்டில் நிறுவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் நிதியமைச்சரிடம் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

summary

Chief Minister Joseph Vijay request to Finance Minister Nirmala Sitharama

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments