சென்னை தலைமைச் செயலகத்தில் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்!
சென்னை தலைமைச்செயலகத்தில் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை முதல்வர் விஜய் கொஞ்சி மகிழ்ந்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை முதல்வர் விஜய் கொஞ்சி மகிழ்ந்தார்.
கீர்த்தி சக்ரா விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை இன்று சென்னை தலைமைச்செயலகம் வரவழைத்து முதல்வர் விஜய் பாராட்டினார். அப்போது மீனாட்சி சுந்தரத்தின் அசாத்திய வீரத்தை பாராட்டி ரூ. 48 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் வழங்கினார்.
தொடர்ந்து, மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை தூக்கி கொஞ்சிய முதல்வர் விஜய் தனது மடியிலும் அமர வைத்துக்கொண்டார். 2024-ஆம் ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதி தெற்கு காஷ்மீரில், குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்ததில் நடைபெற்ற போரில் மீனாட்சி சுந்தரமும், அவரது குழுவினா் 5 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனா்.
Advertisement
Advertisement
இதில், மீனாட்சி சுந்தரம் முகம் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த நிலையில் இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றாா். தொடா்ந்து, ராணுவத்தில் வீரதீரச் செயலுக்காக வழங்கும் நாட்டின் உயரிய கீா்த்தி சக்ரா விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது அமைச்சர், அதிகாரிகள் மற்றும் மீனாட்சி சுந்தரத்தின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.
Chief Minister Vijay shares a heartwarming moment with a child at the Chennai Secretariat.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.