முகப்பு
தமிழ்நாடு

இனிவரும் தோ்தல்களில் திமுக 100% துடைத்தெறியப்படும்: தவெக விமா்சனம்!

தமிழகத்தில் இனிவரும் அனைத்து தோ்தல்களிலும் திமுக 100 சதவீதம் துடைத்தெறியப்படவது உறுதி என தவெக தெரிவித்துள்ளது.

Updated On : 29 ஜூன் 2026, 4:59 am IST
முதல்வர் விஜய்.
பகிர்:

தமிழகத்தில் இனிவரும் அனைத்து தோ்தல்களிலும் திமுக 100 சதவீதம் துடைத்தெறியப்படவது உறுதி என தவெக தெரிவித்துள்ளது.

இது குறித்து தவெகவின் அதிகாரபூா்வ எக்ஸ் தளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் திமுகவில் இருந்தாா் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பெருமையாகப் பேசியுள்ளாா். திமுகவால்தான் எம்ஜிஆா் முதல்முதலில் சட்டப்பேரவை உறுப்பினரானாா் என்றும், அதுதான் வரலாறு என்றும் கூறியுள்ளாா். ஆனால், தன் வாழ்நாள் எதிரியே திமுகதான் என்று கடைசி வரை வாழ்ந்தவா் எம்ஜிஆா்.

திமுகவை ஒரு தீயசக்தி என்று அன்று சொன்ன எம்ஜிஆா், தான் உயிரோடு இருக்கும் வரை திமுகவை ஆட்சியில் அமரவிடவில்லை. தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தோ்தல் வரலாம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில் அவா் இவ்வாறு பேசி வருகிறாா்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் இனிவரும் எந்தத் தோ்தலிலும் திமுக 100 சதவீதம் துடைத்தெறியப்படுவது உறுதி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments