தீயணைப்புத் துறை டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்!
தீயணைப்புத்துறை டிஜிபியாக வெங்கடராமன் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...
தீயணைப்புத்துறை டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
தீயணைப்புத்துறை டிஜிபி சீமா அகர்வாலின் பணிக்காலம் இன்றுடன் (ஜூன் 30) நிறைவு பெற்றது. இதையடுத்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில், ஜூன் 27 ஆம் தேதி காவல் துறை சார்பில், பிரிவு உபசார விழா நடந்தது. இதில், காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி சீமா அகர்வால் ஓய்வு பெற்ற நிலையில், இந்தத் துறைக்கு புதிய டிஜிபி வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலர் பிறப்பித்துள்ளார்.
Advertisement
Advertisement
வெங்கடராமன், தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, டிஜிபி சங்கர் ஜிவாலுக்குப் பதிலாக பொறுப்பு டிஜிபியாக நிர்வாக பிரிவில் இருந்த, சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
தேர்தலுக்குப் பின்னர் முதல்வர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடராமன், 1968-ல் பிறந்தவர். 1994-ல் ஐபிஎஸ்-ஆகத் தேர்வாகி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினார். சிபிசிஐடி தலைமையிடம் மற்றும் நிர்வாக பிரிவிகளிலும் பணியாற்றியுள்ளார்.
The Additional Chief Secretary of the Tamil Nadu government has issued an order appointing Venkataramanan as the Director General of Police (DGP) for the Fire and Rescue Services Department.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.