முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்!

சென்னையில் வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் அறிவிப்பு.

Updated On : 9 மார்ச் 2026, 9:57 pm IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் இன்று (மார்ச் 9) அறிவித்துள்ளது

சிலிண்டர் தட்டுப்பாட்டால் பெங்களூருவில் நாளை முதல் (மார்ச் 10) உணவகங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையிலும் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் எதிரொலியாக சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதிய அளவில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது பல்வேறு நகரங்களில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின்போது, சமையலுக்கு பயன்படும் எல்பிஜி என்னும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பிரித்தெடுக்கப்படுகிறது. தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் எதிரொலியாக, பெங்களூரில் நாளை முதல் உணவகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையிலும் ஹோட்டல்களுக்கான வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையிலும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''உலகளாவிய அரசியல் சூழலால் சிலிண்டர் எரிவாயு விநியோகச் சங்கிலியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு எதிரொலியாக தொழில், வணிக வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர்கள் பற்றாக்குறை தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக சென்னை ஹோட்டல்கள் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

புதிய விதிமுறை

வீடுகளிலும் சமையல் எரிவாயு எல்பிஜி சிலிண்டர் காலியான பின், முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் வழக்கமாக ஓரிரு நாள்களில் சிலிண்டர் விநியோகப்பட்டுவிடும்.

ஆனால், தற்போது எரிவாயு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் 8 நாள்கள் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் முன்கூட்டியே சிலிண்டர்களை முன்பதிவு செய்து வைத்துக்கொள்வதாக தகவல் வெளியானது.

எரிபொருள் தட்டுப்பாடால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதன்படி, ஒரு சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்ட பிறகு, அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய குறைந்தது 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் 25 நாள்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை மார்ச் மாத இறுதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

gas cylinders Crisis Indian Oil Corporation has announced will stop the commercial supply of cooking gas cylinders in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments