முகப்பு
தமிழ்நாடு

ஜன நாயகன் சர்ச்சையில் அரசியல்: அமீர் பேச்சு

விஜய்யின் ஜன நாயகன் படத்தின் மீதான சர்ச்சையில் அரசியல் இருப்பதாக நடிகர் அமீர் பேச்சு

Updated On : 20 மார்ச் 2026, 5:08 pm IST
விஜய் | அமீர் - சித்திரிப்பு
பகிர்:

ஜன நாயகன் படத்தின் மீதான சர்ச்சையில் அரசியல் இருப்பதாக நடிகர் அமீர் பேசியுள்ளார்.

மதுரையில் செய்தியாளருடன் நடிகரும் இயக்குநருமான அமீர் பேசுகையில், "ஒரு திரைப்படத்தை தேர்தல் ஆணையம் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று இதுவரையில் தணிக்கை வாரியம் கூறியதில்லை. இதுதான் முதல்முறை.

அப்படியென்றால், இதில் ஏதோவொரு குறிப்பிடத்தக்க அரசியல் ஒளிந்துள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது; ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

Advertisement

Advertisement

பொதுவாக, ஒரு படத்தில் அதிகப்படியான வன்முறைக் காட்சிகளோ சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான காட்சிகள் இருந்தால் மட்டுமே, அதனை தணிக்கை வாரியம் நிறுத்தி வைக்கும்.

இதன் அடிப்படையில், படங்களிலிருந்து சில காட்சிகள் நீக்கப்படுவதும் நாம் அறிவோம். அதற்கு உதாரணம் - விஸ்வரூபம்.

ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தை பயங்கரவாத அமைப்பினராகச் சித்திரித்ததாகவும், அவர்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டதாகவும் விஸ்வரூபம் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

படத்தின் (ஜன நாயகன்) மீதான பிரச்னை என்ன என்பதை தணிக்கை வாரியம் தெளிவாகக் கூறவில்லை. மேலும், படக்குழுவினரும் பிரச்னை குறித்த முழு விவரங்களையும் வெளியிடவில்லை. இதில் அரசியல் சம்பந்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது" என்று தெரிவித்தார்.

நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜன நாயகன், ஜனவரி 9 ஆம் தேதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் சில காட்சிகள் சர்ச்சையளிப்பதாகக் கூறி, படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கைச் சான்றிதழ் வாரியம் மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், படத்தின் வெளியீடு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

summary

Politics in the Vijay's Jana Nayagan controversy: Director Ameer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments