கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர்: வைகோ
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளை ஒரு புதிர் என மதிமுக தலைவர் வைகோ பேச்சு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளை ஒரு புதிர் என மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து செய்தியாளருடன் வைகோ பேசியதாவது, "கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர். ஏனெனில், 4 அமைப்புகள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் திமுக வெற்றி பெறும் என ஆதரவளித்துள்ளன. வேறு 2 அமைப்புகள் அதிமுகதான் ஆட்சியமைக்கும் என ஆதரவளித்துள்ளன.
ஒரு குறிப்பிட்ட கருத்துக் கணிப்பு அமைப்பில், விஜய் தலைமையிலான தவெக பெரும்பான்மையைப் பெறும் என்று தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
ஆகையால், இந்தப் புதிரைக் காத்திருந்து பார்ப்போம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அனைவரும் ஆவலாக உள்ளனர். முடிவுகளில் ஆச்சரியங்கள் இருக்கலாம். இல்லாமலும் போகலாம்" என்று தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடந்து முடிந்த நிலையில், வருகிற திங்கள்கிழமையில் (மே 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
Everybody is very anxious about the results of the Tamil Nadu Assembly elections, says MDMK Leader Vaiko
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.