தவெக தலைவர் விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
தவெக தலைவர் விஜய்க்கு தமிழிசை வாழ்த்து தெரிவித்தது தொடர்பாக...
தவெக தலைவர் விஜய்க்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜன் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட்டதோடு, செய்தியாளர்களை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யை மனதார வாழ்த்துகிறேன்.
Advertisement
மக்கள் நம்பிக்கையோடு, தமிழக முழுவதும் வாக்களித்ததற்கு சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பின்னடைவை சந்திக்கும் வேட்பாளர்கள் சோர்வடைய வேண்டாம். இது வெறும் தேர்தல் வாக்குகள் மட்டுமே, ஒரு போட்டியாகதான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.