FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தேர்தல் பிரசார நிலையிலிருந்து முதல்வர் விஜய் வெளியே வர வேண்டும்! தமிழிசை

முதல்வர் விஜய்க்கு தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தல்...

Updated On : 2 ஜூன் 2026, 3:03 pm IST
முதல்வர் விஜய் | பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் - கோப்புப் படம்
பகிர்:

தேர்தல் பிரசார நிலையில் இருந்து வெளியே வாருங்கள் என முதல்வர் விஜய்க்கு தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

"முதல்வர் விஜய், திருச்சிக்கு சென்று பேசினார். அவர் தேர்தல் பிரசார நிலையில் இருந்து வெளியே வர வேண்டும்.

முதல்வர் ஆகிவிட்டார். மக்கள் உங்களுக்கு வாய்ப்புகளையும் வாழ்த்துகளையும் கொடுத்துள்ளார்கள். உடனே, போர்க்கால அடிப்படையில் பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நான் கோயம்பேடு வழியாகத்தான் வந்தேன். கார் ஏற்றி, இலங்கை பெண் கொல்லப்பட்டிருக்கிறார். இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

Advertisement

Advertisement

6 மாதம் எதிர்க்கட்சிகள் அமைதியாக இருப்பதாகச் சொன்னார்கள் என்று கூறுகிறார். எதிர்க்கட்சிகள் சொல்லத்தான் செய்வார்கள். முதல்வர் விஜய், பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். வேறு கட்சியில் இருந்து மற்றவர்களை சேர்க்கும் கவனத்தை பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் செலுத்த வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் இந்த புதிய அரசு இன்னும் வேலையைத் தொடங்கவே இல்லை. பிளாக் - ஒயிட்டில் இருப்பதாக முதல்வர் கூறுகிறார். முழுவதும் பிளாக்காக ஆகிவிடக் கூடாது" என்று பேசியுள்ளார்.

summary

TN BJP Senior Leader Tamilisai Soundararajan advises Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments