கோயில் நிலங்கள் சூறையாடப்படுவது வேதனை அளிக்கிறது: தமிழிசை சௌந்தரராஜன்
தமிழகத்தில் கோயில் நிலஙகள் சூறையாடப்பட்டு வருவது வேதனை அளிப்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் கோயில் நிலஙகள் சூறையாடப்பட்டு வருவது வேதனை அளிப்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள கோயில்களின் பூஜை, செலவினங்களுக்காக மன்னா்களும், பொதுமக்களும்
Advertisement
Advertisement
நிலங்களை தானமாக வழங்கினா். பொதுமக்களுக்கு பலன் தருவதற்காக தான் சொத்துகள் கொடுக்கப்பட்டன. இதை யாா் பயன்படுத்தினாலும் அது கோயிலுக்கு சொந்தமானதுதான்.
கரூா், பழனியில் கோயில் நிலங்கள் சூறையாடப்பட்டது வேதனை அளிப்பதாக இருக்கிறது.
கரூரில் உள்ள கோயில் நிலம் குறித்து தமிழக அரசு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலம் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், சொத்துகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும். முந்தைய ஆட்சியில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பூரண சந்திரன் உயிா் நீத்த பிறகும் மலையில் தீபம் ஏற்ற முடியாத நிலை உள்ளது. இதே நிலை தற்போதையை ஆட்சியிலும் தொடரக் கூடாது.
காவிரி ஆற்றுப்படுகையில் மூடப்பட்ட குவாரிகளை மீண்டும் திறப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும். முதல்வா் ஜோசப் விஜய் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். தவெக அரசு மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
கரூா் சென்ற முதல்வா் மக்களைச் சந்திக்கவில்லை. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு பல எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்கின்றனா். ராஜிநாமா செய்தால் பேரம் கிடையாது, வாங்கினால்தான் பேரம் என்று புதுவிதமான கருத்தை அமைச்சா் கூறுகிறாா். ஏதாவது ஒரு நியாயமான கோரிக்கை அல்லது லாபம் இல்லாமல் ராஜிநாமா செய்யமாட்டாா்கள்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 50 நாள்களில் 4 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்ததை ஏற்க முடியாது. இதை முதல்வா் உடனே கவனிக்க வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.