சுயநலத்துக்காக ராஜிநாமா செய்த எம்எல்ஏ-க்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பாஜக
சுயநலத்துக்காக ராஜிநாமா செய்த எம்எல்ஏ-க்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியது குறித்து...
சுயநலத்துக்காக ராஜிநாமா செய்யும் எம்எல்ஏ-க்களை ஜனநாயகத்தை சேர்ந்த மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
திருவொற்றியூரில் செய்தியாளர்களுடன் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, "தவெகவினர் ஒரு தூய சக்தி என்பதனை அவர்கள் காத்துக்கொள்ள வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாதம்கூட ஆகவில்லை. எவ்வளவு வரிப்பணம் வீணாகிறது.
Advertisement
Advertisement
80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற விஜயபாஸ்கர் போன்றவர்களெல்லாம், மக்களின் எண்ணங்களை மதிக்காமல் சுயநலத்துக்காக ராஜிநாமா செய்கிறார்கள். சுயநலத்துக்காக ராஜிநாமா செய்யும் எம்எல்ஏ-க்களை ஜனநாயகத்தை சேர்ந்த மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
பணத்தைக் கொடுத்து ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவுக்கு அவசியமில்லை. தவெக ஆட்சியைக் கவிழ்க்க பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவுக்கு எந்தப் பங்கும் இல்லை" என்று தெரிவித்தார்.
People will not forgive MLAs who resigned for selfish reasons, says BJP Leader Tamilisai Soundararajan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.