முகப்பு
தமிழ்நாடு

பின்னடைவால் சோர்வடைய வேண்டாம் : தமிழிசை

வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ள வேட்பாளர்கள் சோர்வடைய வேண்டாம் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை செளந்தரராஜன் - எக்ஸ்
பகிர்:

வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ள வேட்பாளர்கள் சோர்வடைய வேண்டாம் என மைலாப்பூர் தொகுதி வேட்பாளரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 104 தொகுதிகளிலும், அதிமுக 71 தொகுதிகளிலும், திமுக 59 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

சென்னை கிண்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மைலாப்பூர் தொகுதி வேட்பாளரான தமிழிசை செளந்தரராஜன் நேரடியாக வந்து வாக்குப்பதிவு எண்ணிக்கையை பார்வையிட்டார்.

Advertisement

Advertisement

பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

''அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய்க்கு மனதார வாழ்த்துக்களை தெரிவித்ததோடு

மக்கள் நம்பிக்கையோடு தமிழக முழுவதும் வாக்களித்ததற்கு சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், எதிர்க்கட்சியாக வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ள வேட்பாளர்கள் சோர்வடைய வேண்டாம். இது வெறும் தேர்தல். வாக்குகள் என்பது ஒரு போட்டியாக தான் பார்க்க வேண்டும்'' என தெரிவித்தார்.

summary

Tamilisai Soundararajan stated that candidates who are trailing in the vote count should not lose heart.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.