முதல்வர் ஸ்டாலினின் உழைப்பை காலம் போற்றும்: டிஆர்பி ராஜா
முதல்வர் ஸ்டாலின் குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தது குறித்து...
முதல்வர் ஸ்டாலினின் உழைப்பை காலம் போற்றும் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிஆர்பி ராஜா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”எனது மன்னை தொடர்ந்து மின்னட்டும்.
Advertisement
Advertisement
மூன்று முறை வாய்ப்பளித்த எனது மன்னார்குடி மண்ணுக்கு சேவை செய்யும் வாய்ப்பளித்து என்னை அரவணைத்த அனைவருக்கும், தற்போதும் வாக்களித்த எனது ஆருயிர் மக்களுக்கும் நன்றி.
ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக எனக்கு கிடைத்த இந்த 5 ஆண்டுகளில் மட்டும் நமது மன்னைக்கு இதுவரை யாரும் செய்திராத வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கொண்டுவந்த பெருமையோடு இன்று (நீண்ட நாள்களுக்கு பிறகு) உறங்குவேன்.
மன்னையில் திமுகவுக்கு வாக்களிக்க தவறியவர்கள் மன்னையின் அடுத்த 5 ஆண்டுகால வளர்ச்சியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாக இருந்த எனது அருமை தலைவர் முதல்வர் ஸ்டாலினின் உழைப்பை தமிழ்நாடு மறந்ததுதான் மிகுந்த வேதனை அளிக்கிறது.
அவரின் உழைப்பை காலம் போற்றும். என்றும் எனது மண்ணுக்கும் மக்களுக்கும் துணை நின்று தொடர்ந்து உழைப்பேன்.
தமிழ்நாட்டில் உள்ள உடன்பிறப்புகள் அனைவரும் ஆட்சி இல்லாத போதும் தமிழுக்காக தமிழ்நாட்டிற்காக தொடர்ந்து உழைப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Minister T.R.B. Raaja has stated that time will honor Chief Minister Stalin's hard work.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.