முகப்பு
தமிழ்நாடு

மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

தேர்தல் நடந்து முடிந்த நிலையில், புதிதாக தேர்வான திமுக எம்.எல்.ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது குறித்து...

கோப்புப் படம்
பகிர்:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (மே 7) திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் கூட்டம் மே 7 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்.

Advertisement

Advertisement

இதில், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், திமுகவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

DMK MLAs meeting on May 7th!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments