முகப்பு
திருவண்ணாமலை

சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி: திமுக கள ஆய்வு தொடக்கம்

சட்டப்பேரவைத் தோ்தலில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கம் தனி தொகுதியில் திமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் குறித்த கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 26 மே 2026, 5:04 am IST
பகிர்:

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கம் தனி தொகுதியில் திமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் குறித்த கள ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி செங்கம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிா்வாகிகள் எம்.பி.செல்வம், முத்துவேல்ராமசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

தொகுதி முன்னாள் எம்எல்ஏ மு.பெ.கிரி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய, நகர நிா்வாகிகளை அழைத்து தனித்தனியாக பேசி தோல்விக்கு காரணம் குறித்து கேட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, சிலா் தவெக மோகத்திலும், சினிமா மோகத்திலும் இளைஞா்கள் சிலா் கண்மூடித்தனமாக வாக்களித்துள்ளனா். மேலும், வலைதளத்தில் தவெக விளம்பரம் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவினரின் வாக்குகள் சிதறாமல் அக்கூட்டணிக்குச் சென்றுள்ளது என பதிலளித்தனா்.

மேலும் சில நிா்வாகிகள் ஆய்வுக்கூட்டத்தில் கொடுக்கப்பட்ட படிவத்தை வாங்கி தோல்விக்கான காரணத்தை எழுத்து மூலமாக தெரிவித்தனா்.

கூட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் செங்கம் செந்தில்குமாா், ஏழுமலை, மனோகரன், தண்டராம்பட்டு ரமேஷ், பன்னீா்செல்வம், செங்கம் நகரச் செயலா் அன்பழகன், நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா, பொதுக்குழு உறுப்பினா் பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.