தேர்தல் தோல்வி: திமுக கள ஆய்வுக் குழுவில் இடம்பெற்றவர்கள் யார் யார்?
தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட குழுவை மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்தது குறித்து கள ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அமைத்த 36 பேர் கொண்ட குழுவினர் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
நடந்து முடிந்த பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவானது தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்து மாவட்டச் செயலாளர்கள் - வேட்பாளர்கள் - தொகுதிப் பார்வையாளர்கள் - நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நேரடியாகச் சந்தித்து கருத்துகளை கேட்டறிந்து ஜூன் 5ஆம் தேதிக்குள் மு.க. ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பிக்கவிருக்கிறார்கள்.
இந்தக் குழுவில், மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் பொறுப்பளிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
அதன்படி, ஈரோடு, நாமக்கல் - சி.வி.எம்.பி. எழிலரசன், மன்னை த. சோழராஜன்
நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை பகுதிகளுக்கு - பூச்சி எஸ். முருகன், ஜெகன் பெரியசாமி
சேலம் - வழக்குரைஞர் ஏ. சரவணன், நா. இளையராஜா.
ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி - ச. முரசொலி எம்.பி., சேலம் உமாராணி
சென்னை வடக்கு, திருவள்ளூர் - எம்.எம். அப்துல்லா, ரேகா பிரியதர்ஷினி
சென்னை மேற்கு, சென்னை கிழக்கு - எஸ்கேபி கருணா, கே.ஈ. பிரகாஷ் எம்.பி.
கிருஷ்ணகிரி, தர்மபுரி கிழக்கு - சி.என். அண்ணாதுரை எம்.பி., ரத்னா லோகேஸ்வரன்
தருமபுரி மேற்கு, திருவண்ணாமலை - ஜி. செல்வம் எம்பி, முத்துவேல் ராமசாமி
அரியலூர், கடலூர், திருச்சி, பெரம்பலூர் - இரா. கிரிராஜன் எம்.பி., ப. அப்துல் மாலிக்
கன்னியாகுமரி, நெல்லை - சுபா. சந்திரசேகர், டாக்டர் யாழினி
கரூர், திண்டுக்கல், திருச்சி வடக்கு, புதுக்கோட்டை வடக்கு - டாக்டர் ஆர். கோகுல், இன்பா ஏ.என். ரகு
சிவகங்கை, புதுக்கோட்டை தெற்கு, மதுரை மாநகர், மதுரை வடக்கு - எஸ். ஜோயல், டாக்டர் எ.வ.வே. கம்பன்
தஞ்சை, திருவாரூர் - மாலதி நாகராஜ், சி. ஆனந்தகுமார் (இளைஞரணி)
திருப்பூர், நீலகிரி - ப. தாயகம் கவி, என். மருது கணேஷ்
இராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் - கான்ஸ்டன்டைன், ரவீந்திரன் எம்.பி., இ. பரந்தாமன்
கோவை, திண்டுக்கல் - பரிதி இளம்சுருதி, ஜி.பி. ராஜா
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் - வழக்குரைஞர் ரவீந்திரன், ஜெ. வீரமணி (மாணவரணி)
விழுப்புரம் வடக்கு, தேனி, மதுரை தெற்கு, விருதுநகர் தெற்கு, விருதுநகர் வடக்கு - டாக்டர் அஞ்சுகம் பூபதி, க. பிரபு சுலேந்திரன்
காஞ்சிபுரம் தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, சென்னை தென்மேற்கு - ஹெலன் டேவிட்சன், கே. இளமகிழன் ஆகியோர் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் வந்திருந்தனர்.
இவர்களுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
MK Stalin met today with a 36-member committee formed to conduct a field survey and report on the election defeat.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.