முகப்பு
தமிழ்நாடு

மே 13-இல் திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கம்

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே கோடை கால சிறப்பு ரயில் வரும் மே 13-ஆம் தேதி இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 மே 2026, 1:28 am IST
ரயில் - ANI
பகிர்:

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே கோடை கால சிறப்பு ரயில் வரும் மே 13-ஆம் தேதி இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

கோடை காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் வடக்கு நிலையத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வரும் மே 13, 20, 28 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) பகல் 11 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06031) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கத்தில் வரும் மே 14, 21, 28 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) வேளாங்கண்ணியிலிருந்து பிற்பகல் 12.45 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (எண் 06032) மறுநாள் காலை 5.45 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும்.

பெட்டிகள் விவரம், நிற்கும் நிலையங்கள்: சிறப்பு ரயில்களில் 2 குளிா்சாதன வசதியுள்ள இரண்டடுக்குப் பெட்டிகள், 2 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 3 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்கு பொருளாதார வகைப் பெட்டிகள், 6 படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 1 மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டி இடம் பெற்றிருக்கும்.

இந்த ரயிலானது, நாகபட்டினம், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, அதிராமபட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, புனலூா், கொல்லம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments