மோடி, அமித் ஷாவுக்குப் பணிந்து மக்களின் தீர்ப்பை ஆளுநர் மாற்ற நினைப்பது தவறு! ஜோதிமணி
தவெக தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காதது குறித்து ஜோதிமணி பதிவு...
தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மாற்றி எழுத நினைப்பது மாபெரும் தவறு என்றும் தவெக தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் (5 எம்எல்ஏக்கள்) ஆதரவு அளித்துள்ளது. மேலும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்படுவதால் விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஜய், இரண்டாவது முறையாக ஆளுநரை இன்று சந்தித்துள்ளார். அப்போது போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை தவெக கோரி வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் இதுபற்றி ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஆளுநர் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றால் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ள பாஜகவை, ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க முடியுமா?
திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு வரம்பற்ற அதிகாரம் எதுவும் கிடையாது. அவர் அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர் என்று உச்சநீதிமன்றம் பலமுறை தெளிவாகக் கூறியுள்ளது. த.வெ.க வின் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார். அவர் கூட்டணி என்று கடிதம் கொடுத்தாலும் , த.வெ.க தனிப்பெரும் கட்சி தான். தனிப்பெரும் கட்சியின் தலைவரை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பதுதான் சரியானது. ஆட்சி அமைத்த பிறகு பெரும்பான்மையை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க முடியும். ஆதரவுக் கடிதம் தர வேண்டிய அவசியம் இல்லை. மோடி, அமித்ஷாவின் அழுத்தத்திற்குப் பணிந்து தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மாற்றி எழுத நினைப்பது மாபெரும் தவறு. இதை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
Attempting to rewrite the verdict of people of Tamil Nadu is wrong: Jothimani
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.