ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: பட்டினப்பாக்கம் திரும்பிய விஜய்!
ஆளுநர் மாளிகையில் சுமார் 1.45 மணி நேரம் நடைபெற்ற சந்திப்புக்குப் பின் விஜய் வீட்டுக்குத் திரும்பினார். வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
சென்னை : ஆளுநருடனான சந்திப்பு முடிந்து ஆளுநர் மாளிகையிலிருந்து விஜய் வெளியேறினார். மாலை 6.35 மணிக்கு ஆளுநர் மாளிகை சென்ற விஜய்யுடன் ஆளுநர் சந்திப்பு சுமார் 1.45 மணி நேரம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாகத் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை அவர்கள் பெறவில்லை. இந்த இக்கட்டான சூழலில், தவெகவுக்கு(107 எம்எல்ஏக்கள்) காங்கிரஸ்(5), இந்திய கம்யூனிஸ்ட்(2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(2), விடுதலை சிறுத்தைகள்(2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(2) என மொத்தம் 120 எம்எல்ஏக்கள் (விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் தவெகவில் 107* எம்எல்ஏக்கள்) ஆதரவு கிடைத்தது.
இதையடுத்து,புதிய அரசு அமைப்பதற்கான ஆதரவும் பெரும்பான்மையும் தவெகவுக்கு இருப்பதாக விஜய் வழங்கிய ஆட்சிகோரும் உரிமை கடிதத்தை பெற்றுக்கொண்ட ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அதன்பின் அதனைப் பரிசீலித்து இறுதியில், தவெக தலைவர் சி. ஜோசப் விஜய்யை தமிழக முதல்வராக நியமித்து கடிதத்தை வழங்கினார்.
Advertisement
Advertisement
அதனை பெற்றுக்கொண்டு, அங்கு இருந்து தமது கறுப்பு காரில் பட்டினப்பாக்கத்தில் உள்ள தமது வீட்டுக்குத் திரும்பிய விஜய்க்கு வழிநெடுகிலும் அவரைக் காண காத்திருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்கும் விழா சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறன.
Meeting with Governor Concluded: Vijay Exits Governor's House!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.