தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்
தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம் நடப்பதாக திமுக எம்.பி. வில்சன் பதிவு...
தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம் நடப்பதாக திமுக எம்.பி. வில்சன் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தவெக 108 இடங்களைப் பெற்ற நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் விசிகவின் ஆதரவை எதிர்நோக்கி இருக்கிறது.
இதனிடையேதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ காமராஜ் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், எம்எல்ஏ காமராஜ் அளித்த கடிதம் போலியானது, தவெக குதிரை பேரம் செய்கிறது, அனைத்து கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கூறியிருந்தார். எம்எல்ஏ காமராஜும் தனது ஆதரவுக் கடித்தத்தை மறுத்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் திமுக எம்.பி. வில்சன் இதனைச் சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில்,
"தமிழ்நாட்டில் மாற்றம் கொண்டு வருவோம் என அவர்கள்(தவெக) கூறியதற்கான உண்மையான அர்த்தம் இப்போதுதான் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
தமிழ்நாடு இத்தனை ஆண்டுகளில் இத்தகைய குதிரை பேரத்தைப் பார்க்கவில்லை.
பதவியேற்பதற்கு முன்னதாகவே இவ்வளவு நடக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
Tamil Nadu hasnt seen horse trading attempts like this in many years: DMK MP wilson
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.