எல்லா தந்தைக்கும் இது கிடைப்பதில்லை: எஸ்.ஏ. சந்திரசேகர் நா தழுதழுக்க பேச்சு
முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்றது குறித்து அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியது பற்றி...
சி. ஜோசப் விஜய், பல கஷ்டங்களை மீறி முதல்வராகப் பதவியேற்றிருப்பதாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியதாவது, "இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு? என்னுடைய கனவை என் பிள்ளை நிறைவேற்றியிருக்கிறார். இன்று தமிழ்நாட்டுக்கே அவர் முதல்வராக இருக்கிறார்.
அவர் சொன்னால், செய்துவிடுவார். அவர் எப்போதுமே எந்த விஷயத்தைச் சொன்னாலும், கண்டிப்பாக அதை செய்வார். அவர் சும்மா பேச்சுக்கு சொல்பவரில்லை.
Advertisement
Advertisement
'நான் சும்மா பேசுவதில்லை, என்ன முடியுமோ அதைத்தான் பேசுவேன். என்ன பேசுகிறேனோ அதைத்தான் செய்வேன்' என்று அவர் சொல்வார்.
இது எல்லா அப்பனுக்கும் கிடைப்பதில்லை. ஒரு நடிகராக உச்ச இடத்துக்குச் சென்று, அங்கிருந்து அதனை விட்டுவிட்டு, இங்கு வந்துள்ளார். ஆனால், நான் உணர்ச்சிவயப்பட்டு எதற்கென்றால், அவர் பட்ட கஷ்டங்களை நினைத்துதான். அவற்றையெல்லாம் மீறி 'ஜோசப் விஜயாகிய நான்' என்று சொல்லும்போது நான் உணர்ச்சிவயப்பட்டேன்" என்று தெரிவித்தார்.
My son (Vijay) has fulfilled my dream, says SA Chandrasekhar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.