முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்

அதிமுக கொறடா சி. விஜயபாஸ்கர்; எஸ். பி. வேலுமணி தலைவர்! பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்

சி. வி. சண்முகம் - கோப்பிலிருந்து படம் Center-Center-Chennai
பகிர்:

சென்னை : எஸ். பி. வேலுமணியை சட்டப்பேரவை அதிமுக குழு தலைவராக்க 30 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து சி. வி. சண்முகம் தலைமையில் பேரவை தற்காலிக தலைவர் கருப்பையாவை இன்று(மே 11) மாலையில் சந்தித்து கடிதம் அளித்தனர்.

முன்னதாக, சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் குழு தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலரான எடப்பாடி பழனிசாமியைத் தேர்ந்தெடுக்க 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கருப்பையாவிடமும் பேரவைச் செயலரிடமும் இன்று பகலில் கடிதம் வழங்கினர்.

இதனால் அக்கட்சியில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. இரு அணிகளாக அதிமுக பிளவுபட்டிருப்பதை அண்மை சம்பவங்கள் தெளிவாகக் காட்டியுள்ளன. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Advertisement

summary

Chennai: With the support of 30 MLAs, an AIADMK legislative group led by C.V. Shanmugam met Assembly Pro-tem Speaker Karuppiah this evening (May 11) and submitted a letter proposing S.P. Velumani as the leader of the AIADMK legislative party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.