இபிஎஸ் அணிக்கு மாறிய 5 எம்எல்ஏக்கள்! எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பின்னடைவு!
அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்து 5 எம்எல்ஏக்கள் இபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பற்றி...
அதிமுவில் சி.வி. சண்முகம் தரப்பில் இருந்து 5 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எதிராக சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்து தற்போதைய அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக இருந்த 5 எம்எல்ஏக்கள் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆற்காடு எம்எல்ஏ சுகுமார், அந்தியூர் எம்எல்ஏ ஹரிபாஸ்கர், இன்று காலை எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
அதேபோல பண்ருட்டி எம்எல்ஏ மோகன், இபிஎஸ் ஆதரவாளரான கே.பி. முனுசாமியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து சங்கரன்கோவில் எம்எல்ஏ திலீபன் ஜெய்சங்கரும் காங்கேயம் எம்எல்ஏ நடராஜன் ஆகியோரும் இபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு 27 ஆக உயர்ந்துள்ளது. இது சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
கொறடா, சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதனிடையே, மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து தங்கள் ராஜிநாமா கடிதங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
5 AIADMK MLAs Switching from sp velumani team to eps team
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.