திரைத்துறையில் எண்ணற்ற பல சாதனைகளைப் படைத்தவர் கே. பாக்யராஜ்: எஸ்.பி. வேலுமணி
திரைத்துறையில் எண்ணற்ற பல சாதனைகளைப் படைத்தவர் கே. பாக்யராஜ் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் எண்ணற்ற பல சாதனைகளைப் படைத்தவர் கே. பாக்யராஜ் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் உடல்நலக்குறைவு காரணமாக காலமான செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன்.
கே.பாக்யராஜ் திரைத்துறையில் எண்ணற்ற பல சாதனைகளைப் படைத்தவர்.
Advertisement
Advertisement
தனது ஆரம்பகால வாழ்க்கையை கோயம்புத்தூரில் கழித்த அவர், திரைப்படங்களில் நுழைவதற்கு முன், நாடகங்களில் தீவிர ஆர்வம் காட்டி தனது திரைக்கதை திறனை வளர்த்துக்கொண்டார்.
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனது தீவிர ரசிகரான கே.பாக்யராஜ் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.
திரைத்துறை மட்டுமல்லாது ஊடகத்துறையிலும் அவரின் பங்கு அளப்பரியது. அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், திரைத்துறையினர் மற்றும் அவர் சார்ந்த ஊடகத்துறையினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Former AIADMK Minister S.P. Velumani has stated that K. Bhagyaraj was someone who achieved countless milestones in the film industry.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.