ஒரு நீட் தேர்வு கூட முறைகேடு இல்லாமல் நடந்ததில்லை: கமல்ஹாசன்
நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும் மாணவர்களை காக்க வேண்டும் என கமல்ஹாசன் கருத்து...
நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும் அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடமிருந்தும் மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை ஒரு நீட் தேர்வு கூட முறைகேடு இல்லாமல் நடந்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
''நீட் நுழைவுத் தேர்வுக்காக இரவு பகலாகப் படித்த 22 லட்சம் மாணவர்களின் உழைப்பும் கனவும் குற்றக்கும்பல்களால் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்?
இதுவரை ஒரு நீட் தேர்வு கூட முறைகேடு புகார்கள் இல்லாமல் நடந்ததாக எனக்கு நினைவில்லை. இதனால்தான் கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டுமென போராடிக்கொண்டிருக்கிறோம்.
நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும் அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடமிருந்தும் இந்திய மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும்.'' எனப் பதிவிட்டுள்ளார்.
Not even a single NEET exam has been conducted without irregularities: Kamal Haasan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.