நாகரிக அரசியல் செய்யும் விஜய்: காதர் மொய்தீன் பாராட்டு!
முதல்வர் விஜயுடனான சந்திப்பில் ஐயூஎம்எல் தலைவர் கூறுவது..
இந்திய முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீனை முதல்வர் விஜய் இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
சென்னை மண்ணடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு சென்ற முதல்வர் விஜயை வாசலில் வந்து காதர் மொய்தீன் வரவேற்பு அளித்தார்.
முன்னதாக, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரைச் சந்தித்த விஜய், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்குச் சென்று வாழ்த்து பெற்றார்.
இதைத்தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்று முதலில் ஐயூஎம்எல் கட்சித் தலைவரான காதர் மொய்தீனை சந்தித்தார். இக்கட்டான சூழலில் எனக்கு கைக்கொடுத்து உதவியதற்கு நன்றி. என்னை எப்போதும் நீங்கள் நம்பலாம் என்று முதலவர் விஜய் கூறினார்.
இதையடுத்து ஐயூஎம்எல் தலைவர் பேசியதாவது,
முதல்வர் விஜய் நாகரிக அரசியல் செய்கிறார். முந்தைய அரசும் நாகரிக அரசியலை செய்தது.
பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் புழங்கும் இடத்தின் அருகே உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது நல்ல நடவடிக்கை என்று அவர் பாராட்டினார். ஆளுநர் நிகழ்வில் வந்தே மாதரம் பாடுவது இயல்புதான் என்றும் அவர் கூறினார்.
Chief Minister Vijay met with Kader Mohideen, the leader of the Indian Union Muslim League, today and received his blessings.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.