யாரையும் விமர்சிக்க வேண்டாம்! ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன்!
விமர்சனங்கள் குறித்து ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் கட்சியினருக்கு அறிவுறுத்தல்...
தவெக ஆட்சியில் இடம்பெற்றுள்ளது குறித்த விமர்சனங்கள் தொடர்பாக ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் தனது கட்சியினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் நாகரிகத்தை கடைப்பிடித்து வரும் இயக்கமாகும். யாரையும் வசைப்பாடக்கூடாது என்பதை கொள்கையாக கொண்டிருக்கிறோம்.
Advertisement
Advertisement
நீண்ட காலமாக தி.மு.கழகத்துடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழமை கொண்டிருந்த நிலையில், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களின் தீர்ப்பை மதித்து, பா.ஜ.க. அனுசரணையுடன் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற பரந்த நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைய துணை நின்றிருக்கின்றோம்.
இம்முடிவை தி.மு.க. நண்பர்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர். இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நண்பர்களும் மறுப்பு தெரிவித்து கடும் சொற்களைப் பயன்படுத்தி வருவது வருத்தத்தை அளிக்கின்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்தவர்கள் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் கட்டிக் காத்த "கண்ணிய அரசியல் பாதை"யில் பயணிப்போம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐயுஎம்எல்
திமுக கூட்டணியில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் ஐயுஎம்எல் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்துள்ளது. ஐயுஎம்எல் பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகான், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழுவில் வாணியம்பாடி எம்எல்ஏவும் சட்டப்பேரவைக் கட்சித் தலைவருமான எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் பாஷா இடம்பெற்றுள்ளது குறிபிடத்தக்கது.
Do not criticize anyone: IUML leader Kader Mohideen
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.