ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை! திடீர் விலையுயர்வு ஏன்?
மாலை நிலவரப்படி தங்கம் விலை பற்றி..
சென்னையில் ஆபரணத் தங்கம் காலையில் ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில், மாலையில் குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து ஏற்ற - இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், வர்த்தகம் தொடங்கும்போது தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
அதன்படி, காலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 8,560 உயர்ந்து, ரூ. 1,23,200-க்கும், கிராமுக்கு ரூ. 1,070 உயர்ந்து ரூ. 15,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வர்த்தகம் நிறைவுபெறும்போது காலையில் அதிகரித்த தங்கத்தின் விலை, மாலையில் குறைந்துள்ளது.
அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ. 400 குறைந்து ஒரு கிராம் ரூ. 15,000-க்கும், சவரனுக்கு ரூ. 3,200 குறைந்து ரூ. 1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ. 10 ஆயிரமும் குறைந்துள்ளது.
முன்னதாக இன்று காலையில், வெள்ளி கிராமுக்கு ரூ. 30-ம், கிலோவுக்கு ரூ. 30 ஆயிரமும் உயர்ந்தது.
திடீர் விலையுயர்வு ஏன்?
ஈரான் போர் உள்ளிட்ட சர்வதேச காரணங்களால் தங்கம் விலை அதிகரித்து வருகின்றது. இந்தியாவில பொருளாதார சிக்கல், ரூபாயின் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால் ஓராண்டுக்கு மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தங்கம் - வெள்ளி பொருள்கள் மீதான சுங்க வரியை 6ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ள நிலையில், இந்த வரி உயர்வு இன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன் தாக்கமே இன்று காலை அதிரடியாக தங்கம்-வெள்ளி உயர்ந்தது.
In Chennai, ornamental gold, which surged at jet speed in the morning, declined in the evening.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.