முகப்பு
தமிழ்நாடு

மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?

மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைக்கப்பட்டது பற்றி...

கோப்புப்படம் - ANI
பகிர்:

உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ. 1,000 பயனாளிகள் அனைவருக்கும் வியாழக்கிழமை காலை வரவுவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, உயர்க்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழும், மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழும் மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ. 1,000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு அந்த திட்டத்தை தொடருமா என்ற கேள்வி நிலவியது. மாதம்தோறும் 7 ஆம் தேதி வரவுவைக்கப்படும் நிலையில், இந்த மாதம் உதவித் தொகை வரவு வைக்கப்படாதது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

Advertisement

Advertisement

அப்போது பேசிய முதல்வர் ஜோசப் விஜய், முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டப் பயனாளிகள் அனைவருக்கும் இன்று காலை ரூ. 1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம்தோறும் 15 ஆம் தேதி குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ. 1,000 வரவு வைக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே, தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், மே மாதத்துக்கான உரிமைத் தொகை எப்போது வரும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக நிலவியது.

இந்த நிலையில், நாளை வழக்கம்போல் பழைய திட்டத்தின் கீழ் ரூ. 1,000 வரவுவைக்கப்படும் எனத் தெரிகிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, ரூ. 2,500 வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கிய பிறகு தொகை உயர்த்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Rs. 1,000 Assistance Credited to Students! Women's Entitlement amount Expected Tomorrow?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments