முதல்வர் விஜய் வரும் முன் சோஃபா வந்தது ஏன்? - திருமாவளவன் விளக்கம்
விசிக அலுவலகத்திற்கு சோஃபா வந்தது குறித்து திருமாவளவன் விளக்கம்...
முதல்வர் விஜய் சந்திப்புக்கு முன் விசிக அலுவலகத்திற்கு வந்த சோஃபா ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்டது என கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன்,
"என்னை முதல்வராக்க முயற்சி நடந்தது குறித்து எனக்குத் தெரியாது. நண்பர்கள் மூலமாக மட்டுமே எனக்குத் தகவல் வந்தது.
Advertisement
Advertisement
முதல்வர் பதவிக்காகவே தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க நான் தாமதம் செய்ததாக பலரும் அவதூறு பரப்புகிறார்கள். முதல்வர் பதவிக்காக நான் காத்திருக்கவில்லை.
முதல்வர் விஜய் சந்திப்புக்கு முன், விசிக அலுவலகத்திற்கு வந்த சோஃபா ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்டது" என்று கூறினார்.
முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தரப்பு எம்எல்ஏக்களை விஜய் சந்திப்பதற்கு முன்னதாக, சி.வி சண்முகம் அலுவலகத்திற்கும் ஒரு சோஃபா வந்தது.
ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுக்கு தவெக சார்பில் ஒரு சோஃபா அனுப்பப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் குற்றச்சாட்டுமுன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Why Did Sofa Arrive Before Chief Minister Vijay: Thirumavalavan Explains
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.