முகப்பு
தமிழ்நாடு

அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!

அம்மா உணவகங்களில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என புகார்கள் எழுந்த நிலையில் நடவடிக்கை...

முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அம்மா உணவகங்களில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என புகார்கள் எழுந்த நிலையில், முதல்வர் விஜய் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

Advertisement

''தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.

சமீப காலங்களில் இவ்வுணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் உரிய அரசுத் துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

இந்த மறுசீரமைப்பிற்கும். பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Chief Minister Vijay Orders Renovation of Amma Canteens

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.