கோவை சிறுமி பாலியல் கொலை: அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு
கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கில் கைதானவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட கார்த்தி, கால் முறிவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் அவரைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
ஏதேனும் அவசர நிலை அல்லது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் குறித்த கூடுதல் தகவல்களை சேகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கோவை சிறுமி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டாவது குற்றவாளி சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அருண்குமார் முன்னிலையில் குற்றவாளி மோகன் ஆஜர்படுத்தி விசாரணைக்கு எடுத்துள்ளனர்.
வருகின்ற 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.