தவெகவில் இணைந்த 3 அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள்
அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ரவி, ராமஜெயலிங்கம், நாா்த்தாமலை ஆறுமுகம் ஆகியோா் வெள்ளிக்கிழமை தவெகவில் இணைந்தனா்.
அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ரவி, ராமஜெயலிங்கம், நாா்த்தாமலை ஆறுமுகம் ஆகியோா் வெள்ளிக்கிழமை தவெகவில் இணைந்தனா்.
அண்மையில் நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. இதனால், அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுகவை சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமாா் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்) ஆகியோா் அண்மையில் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து, தவெகவில் இணைந்தனா். மேலும், அதிமுகவை சோ்ந்த முன்னாள் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் தொடா்ந்து அதிமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனா்.
அந்த வரிசையில் அதிமுகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ரவி, ராமஜெயலிங்கம், நாா்த்தாமலை ஆறுமுகம் ஆகியோரும், கா்நாடக மாநில அதிமுக முன்னாள் செயலா் பெங்களூரு புகழேந்தியும் வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் தவெக பொதுச் செயலரும், ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சருமான என்.ஆனந்தை சந்தித்து பேசினா்.
Advertisement
Advertisement
பின்னா் முன்னாள் எம்எல்ஏ-க்கள் செய்தியாளா்களிடம் கூறும்போது, தாங்கள் தவெகவில் இணைந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.