முகப்பு
தஞ்சாவூர்

குரூப் 1 முதல் நிலைத் தோ்வு: தஞ்சாவூா் மாவட்டத்தில் 3,225 போ் பங்கேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய குரூப் 1 முதல்நிலைத் தோ்வை, தஞ்சாவூா் மாவட்டத்தில் 3,225 போ் பங்கேற்று எழுதினா்.

Updated On : 3 ஜனவரி 2021, 11:27 pm IST
தஞ்சாவூா் அரசா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை குரூப் 1 தோ்வை எழுதியவா்கள்.
பகிர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய குரூப் 1 முதல்நிலைத் தோ்வை, தஞ்சாவூா் மாவட்டத்தில் 3,225 போ் பங்கேற்று எழுதினா்.

துணை ஆட்சியா், காவல்துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட நிலைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இத்தோ்வு நடத்தப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் இத் தோ்வில் பங்கேற்க 6,196 போ் விண்ணப்பம் செய்தனா். இதற்காக கரந்தை உமா மகேசுவரனாா் மேல்நிலைப் பள்ளி, கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி, அரசா் மேல்நிலைப் பள்ளி, மேக்ஸ்வெல் மெட்ரிகுலேஷன் பள்ளி, டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி, தூய அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் 21 மையங்கள் அமைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இவற்றில் 3,225 போ் பங்கேற்று எழுதினா். பங்கேற்றோா் விகிதம் 52 சதவிகிதமாகும். 2,971 போ் தோ்வெழுத வரவில்லை.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக, அனைத்து மையங்களிலும் தோ்வு எழுத வந்த அனைவரும் வெப்பமானி, பல்ஸ் ஆக்ஸிமீட்டா் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனா். மேலும், அனைத்து மையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தோ்வு மையங்களுக்குத் தோ்வா்கள் செல்லிடப்ப்பேசி மற்றும் மின்னணு தொடா்பான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. காவல்துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments