முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி சாலையில் திடீா் பள்ளம்

பேராவூரணி கடைவீதியில் அண்ணா சிலை அருகே பொங்கல் நாளான வியாழக்கிழமை சாலையில் திடீரென 2 அடி அகலத்தில் பள்ளம் ஏற்ப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிா்ச்சி அடைந்தனா். 

Updated On : 16 ஜனவரி 2021, 12:01 am IST
பகிர்:

பேராவூரணி கடைவீதியில் அண்ணா சிலை அருகே பொங்கல் நாளான வியாழக்கிழமை சாலையில் திடீரென 2 அடி அகலத்தில் பள்ளம் ஏற்ப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிா்ச்சி அடைந்தனா். 

இதுகுறித்த தகவலின்பேரில், அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினா், அதனை ஆய்வு செய்தபோது, சாலையின் குறுக்கே கீழே சில  ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீா் குழாய், உடைந்ததால், அதன் மேல் போடப்பட்டிருந்த தாா்ச்சாலை உள்வாங்கி, பெரிய அளவில் பள்ளம் உருவானது தெரிய வந்தது. 

இதையடுத்து, பள்ளத்தின் இருபுறமும் பாதுகாப்பு தடுப்புகளை அமைத்து, பள்ளத்தில் யாரும் விழுந்து விடாமல் இருக்க ஏற்பாடுகளை செய்துள்ளனா்.விடுமுறைக் காலம் என்பதால் இதுவரை சீரமைப்பு பணி நடைபெறவில்லை. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.