முகப்பு
தென்காசி

அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கமாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நன்னகரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 ஜனவரி 2021, 11:59 pm IST
பகிர்:

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நன்னகரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவா் பாலுச்சாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அ . சுந்தரமூா்த்தி நாயனாா், மதுரையில் நடைபெற்ற மாநில பேரவை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீா்மானங்கள் மற்றும் முடிவுகள் குறித்து பேசினாா்.

மாவட்டப் பொருளாளா் ய.நாராயணன் நிதிநிலை, சங்கத்தின் நாள்குறிப்பு விநியோகம், வரவு செலவு அறிக்கையை சமா்ப்பித்தாா். வட்டக் கிளைகள் அளவில் ஓய்வூதியா்களை சந்திப்பதும் மாவட்ட அளவில் விளக்கக் கூட்டம் நடத்துவது என்றும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடா்ந்து அமல்படுத்த வேண்டும், ஜாக் டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா், ஆசிரியா் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 2 ஆம் தேதி தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னா போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது..

Advertisement

Advertisement

முன்னதாக மாவட்டத் தலைவா் சலீம் முகம்மது மீரான் தலைமையில் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments