முகப்பு
கிரிக்கெட்

இந்திய அணி டி20 தொடரை இழந்தது ஆச்சரியமளிக்கவில்லை: அம்பத்தி ராயுடு

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி இழந்தது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜூன் 2026, 7:52 pm IST
- படம் | பிசிசிஐ
பகிர்:

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி இழந்தது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. தொடரின் முதல் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அதிர்ச்சியளித்த அயர்லாந்து அணி, இரண்டாவது போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மேலும், 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி இழந்தது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி இழந்தது உண்மையில் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ஏனெனில், அயர்லாந்து ஆடுகளங்களில் விளையாடுவதற்கு ஏற்றவாறு இந்திய அணி தயாரானதாக நான் நினைக்கவில்லை. ரன்கள் குவிப்பதற்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாடிவிட்டு, சவாலான ஆடுகளங்களில் விளையாடுவது மிக மிக கடினம்.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பலரும் பேட்டினை வேகமாக சுழற்றக் கூடியவர்கள் என்பதால், அவர்களுக்கு அயர்லாந்து ஆடுகளங்கள் சவாலானதாக இருந்திருக்கும். திலக் வர்மா மெதுவான பந்துகளுக்கு எதிராக திறம்பட விளையாட வேண்டும். அவர் கவனமாக கால் அசைவுகளை மேற்கொண்டு ஷாட்டுகள் விளையாட வேண்டும். அவர் மெதுவான ஆடுகளங்களில் நன்றாக விளையாட பழகிக் கொள்ள வேண்டும் என்றார்.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி முழுமையாக இழந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மறுநாள் (ஜூலை 1) தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

summary

Former Indian player Ambati Rayudu has stated that he is not surprised by the Indian team's loss in the T20 series against Ireland.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments