FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவிக்கும் முன்பே சிக்கலில் இந்தியா!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் முன்பே இந்திய வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Updated On : 26 ஜூலை 2026, 3:45 pm IST
வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி - படம் | AP
பகிர்:

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் முன்பே இந்திய வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

வாஷிங்டன் சுந்தர் மட்டுமின்றி, ஆல்ரவுண்டர்களான நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா இருவரும் இந்தத் தொடரில் விளையாடுவது சந்தேகம் எனவும் கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது, காலில் காயம் ஏற்பட்டதால் வாஷிங்டன் சுந்தர் முதல் டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார். அவரது உடல்தகுதியைப் பொருத்து இரண்டாவது டெஸ்ட்டில் இடம்பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவும் காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டரான சாய் சுதர்சன் காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். உடல்தகுதியைப் பொருத்தே அவரும் அணியில் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது.

summary

Even before the Indian squad for the Test series against Sri Lanka is announced, a situation has arisen where several Indian players are set to withdraw due to injuries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments