FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவிக்கவுள்ள பிசிசிஐ; பும்ரா இடம்பெறுவாரா?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Updated On : 25 ஜூலை 2026, 5:22 pm IST
ஜஸ்பிரித் பும்ரா - படம் | AP
பகிர்:

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடியது. இந்தத் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜஸ்பிரித் பும்ராவின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கின்றன. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அவர் முழு உடல்தகுதி பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Doubts have arisen as to whether Jasprit Bumrah will be included in the Indian squad for the Test series against Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments