FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட பும்ரா தயார்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ஜஸ்பிரித் பும்ரா முழு உடல்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜூலை 2026, 4:25 pm IST
ஜஸ்பிரித் பும்ரா - படம் | AP
பகிர்:

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ஜஸ்பிரித் பும்ரா முழு உடல்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவின் பெயரும் இடம்பெற்றது. இருப்பினும், உடல்தகுதியின் அடிப்படையிலேயே அவர் போட்டிகளில் களமிறக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ஜஸ்பிரித் பும்ரா முழு உடல்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவருக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்துவிட்டார். அவர் முழு உடல்தகுதியுடன் உள்ளார். இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்திய அணி, எதிர்வரும் 9 டெஸ்ட் போட்டிகளில் 7 போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

The BCCI has stated that Jasprit Bumrah is fully fit to play in the Test series against Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments