FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

15 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை... டெஸ்ட் தரவரிசையில் ஸ்டார்க் முதலிடம்!

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கைப் பற்றி...

51 வினாடிகள் முன்பு
மிட்செல் ஸ்டார்க் - பும்ரா.
பகிர்:

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும். அதன்படி, கடந்த வாரத்துக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற வங்கதேச அணிக்கு இரண்டாவது போட்டியில் பயத்தைக் காட்டியிருந்தார் மிட்செல் ஸ்டார்க்.

Advertisement

Advertisement

மிட்செல் ஸ்டார்க்.

முதல் இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேச அணி மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

முதல் இன்னிங்ஸில் 10 ஓவர்கள் பந்து வீசி, 6 மெய்டன்களுடன் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார் ஸ்டார்க். அதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மேலும், அவர் டெஸ்ட் போட்டிகளில் 439 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய டேல் ஸ்டெயினைப் பின்னுக்குத்தள்ளி ஸ்டார்க் 445 விக்கெட்டுகள் வீழ்த்தி அவரது சாதனையையும் முறியடித்தார்.

இந்த நிலையில், டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவைப் பின்னுக்குத்தள்ளி ஸ்டார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

2024 ஆண்டு பிப்ரவரி முதல் முதலிடத்தைத் தன்வசம் வைத்திருந்த பும்ரா, இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடாததால், முதலிடத்தை இழந்திருக்கிறார்.

15 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஸ்டார்க், பல்வேறு சாதனைகளைப் படைத்திருந்தாலும், முதலிடத்தைப் பிடிக்காதது ஒரு குறையாகவே கருதப்பட்டு வந்த நிலையில் அதனையும் இன்று முறியடித்திருக்கிறார்.

872 புள்ளிகளுடன் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தையும், 862 புள்ளிகளுடன் பும்ரா 2-வது இடத்தையும், 861 புள்ளிகளுடன் மேட் ஹென்றி 3-வது இடத்தையும், 841 புள்ளிகளுடன் பாட் கம்மின்ஸ் 4-வது இடத்தையும், 825 புள்ளிகளுடன் மார்க்கோ யான்சன் 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

summary

Jasprit Bumrah has been dethroned as the No.1 Test bowler, with Australia's Mitchell Starc taking the top spot for the first time after his stellar performance against Bangladesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments