டெஸ்ட் கிரிக்கெட்டில் டேல் ஸ்டெயின் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயினின் சாதனையை மிட்செல் ஸ்டார்க் முறியடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயினின் சாதனையை மிட்செல் ஸ்டார்க் முறியடித்துள்ளார்.
வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஆகஸ்ட் 22) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
Advertisement
Advertisement
முதல் இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேச அணி மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினின் சாதனையை மிட்செல் ஸ்டார்க் முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் டேல் ஸ்டெயின் 439 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், மிட்செல் ஸ்டார்க் 441 விக்கெட்டுகள் வீழ்த்தி அவரது சாதனையை முறியடித்துள்ளார்.
இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 107 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டார்க் 441 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 19 ஐந்து விக்கெட்டுகள், 3 பத்து விக்கெட்டுகள் அடங்கும்.
Mitchell Starc has surpassed former South African player Dale Steyn's record for the most wickets taken in Test cricket.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.