ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த மிட்செல் ஸ்டார்க்!
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தது குறித்து...
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (36 வயது) மீண்டும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-2 என இழந்தது. இருப்பினும் இந்தத் தொடரில் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்துவீசினார்.
இந்தத் தொடரில் மிட்செல் ஸ்டார்க் முதல் இன்னிங்ஸில் (2+1) 3 விக்கெட்டுகளும், இரண்டாவது டெஸ்ட்டில் 3 விக்கெட்டுகள் (ஒரே இன்னிங்ஸில்), கடைசி டெஸ்ட்டில் (6+3) 9 விக்கெட்டுகள் எடுத்தார்.
Advertisement
Advertisement
மொத்தமாக, இந்தத் தொடரில் 15 விக்கெட்டுகள் எடுத்த மிட்செல் ஸ்டார்க் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். கடந்த வாரம் மார்கோ யான்சென் முதலிடத்தைப் பிடிக்க, ஸ்டார்க் இரண்டாம் இடத்துக்கு கீழிறங்கியிருந்தார். கடைசி போட்டியில் அசத்தியதாம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்.
தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் சிமோன் ஹார்மெர் 9 இடங்கள் முன்னேறி 7ஆவது இடத்தைப் பிடித்தார்.
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை
1. மிட்செல் ஸ்டார்க் - 881 புள்ளிகள்
2. மார்கோ யான்சென் - 875 புள்ளிகள்
3. மாட் ஹென்றி - 861 புள்ளிகள்
4. ஆலி ராபின்சன் - 856 புள்ளிகள்
5. ஜஸ்பிரீத் பும்ரா - 853 புள்ளிகள்