ஐசிசி தவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்!
டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்த டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், இந்திய வீராங்கனைகள் நந்தனி சர்மா மற்றும் கிராந்தி கௌட் உள்பட பலர் ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
Advertisement
Advertisement
வலதுகை வேகப் பந்துவீச்சாளரான நந்தனி சர்மா 26 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 45-வது இடம் பிடித்துள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும், அவர் ஐசிசி தரவரிசையில் தனது சிறந்த ரேட்டிங் புள்ளிகளைப் (507 ரேட்டிங் புள்ளிகள்) பதிவு செய்துள்ளார்.
கிராந்தி கௌட் 9 இடங்கள் முன்னேறி தவரிசையில் 43-வது இடம் பிடித்துள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் அவர் இரண்டு போட்டிகளிலும் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
பேட்டிங்கைப் பொருத்தவரை இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷஃபாலி வர்மா தரவரிசையில் 4-வது இடத்தில் தொடர்கிறார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அவர் 25 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (அக்டோபர் 20) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Indian women's players have improved in the ICC rankings for T20 matches.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.