ஐசிசி தரவரிசையில் தன்னுடைய உச்சம் தொட்ட ஷ்ரேயாஸ் ஐயர்..! 18 இடங்கள் முன்னேற்றம்!
இந்தியாவின் டி20 கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஐசிசி தரவரிசையில் தன் உச்சபட்ச இடத்துக்கு முன்னேறியுள்ளது குறித்து...

இந்தியாவின் டி20 கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஐசிசி டி20 தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி தனது உச்சபட்ச இடத்துக்கு வந்திருக்கிறார்.
ஒருநாள் தரவரிசையில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 8 இடங்கள் முன்னேறி 46ஆவது இடம் பிடித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய மே.இ.தீ. அணி 19.1 ஓவர்களில் 171 ரன்கள் குவிக்க, இந்தியா 14.4 ஓவர்களில் இலக்கை எட்டியது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 43 பந்துகளில் 102 ரன்கள் குவித்து அசத்தினார். நீண்ட நாள்களாக ஃபார்மில் இல்லாத ஷ்ரேயாஸ் ஐயருக்கு இது ஆசுவாசத்தை அளித்துள்ளது.
இந்த சதத்துடன் டி20 தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுதான் அவரது உச்சபட்ச டி20 தரவரிசை என்பது குறிப்பிடத்தக்கது. டாப் 10ல் இந்திய வீரர்கள் நால்வர் இடம்பிடித்துள்ளார்கள்.
ஐசிசி டி20 தரவரிசை
1. இஷான் கிஷன்
2. அபிஷேக் சர்மா
3. சாஹிப்சாதா ஃபர்ஹான்
4. ஹாரி புரூக்
5. ஜாஸ் பட்லர்
6. டெவால்டு பிரேவிஸ்
7. ஸ்ரேயாஸ் ஐயர்
8. பில் சால்ட்
9. பதும் நிசாங்கா
10. திலக் வர்மா