FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆசியப் போட்டியில் அசத்திய ஷஃபாலி வர்மா; ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம்!

ஆசியப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா ஐசிசியின் சிறந்த வீராங்கனைகளுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

22 செப்டம்பர் 2026, 7:24 pm IST
ஷஃபாலி வர்மா - படம் | பிசிசிஐ
பகிர்:

ஆசியப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா ஐசிசியின் சிறந்த வீராங்கனைகளுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. அதில், கிரிக்கெட்டில் இந்திய மகளிரணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன், நடப்பு ஆசியப் போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை இந்திய மகளிரணி வென்று கொடுத்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி முழுவதும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய ஷஃபாலி வர்மா, 3 போட்டிகளில் 188 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சதம் விளாசி அசத்திய ஷஃபாலி வர்மா, இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் அதிரடியாக 48 ரன்கள் எடுத்து அசத்தினார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஆசியப் போட்டி முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஷஃபாலி வர்மா சர்வதேச டி20 பேட்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

டி20 போட்டிகளில் ஐசிசியின் சிறந்த பேட்டர்களுக்கான தரவரிசையில் 6-வது இடத்திலிருந்த ஷஃபாலி வர்மா, 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சு தரவரிசையில் ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா இருவரும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

summary

Indian player Shafali Verma, who delivered an outstanding performance at the Asian Games, has climbed the ICC rankings for top players.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments