FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இதைவிட பெரிய உணர்வு எதுவும் இருக்க முடியாது: ஷஃபாலி வர்மா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது குறித்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா பேசியுள்ளார்.

22 செப்டம்பர் 2026, 6:43 pm IST
ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா - படம் | பிசிசிஐ
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது குறித்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா பேசியுள்ளார்.

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. அதில், கிரிக்கெட்டில் இந்திய மகளிரணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன், நடப்பு ஆசியப் போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை இந்திய மகளிரணி வென்று கொடுத்துள்ளது.

இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது குறித்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா பேசியுள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நம்முடைய தேசியக் கொடி உயரப் பறப்பதை உறுதி செய்வதற்காகவே நாங்கள் விளையாடினோம். அதைக் காட்டிலும் வேறு எந்தவொரு பெரிய உணர்வும் இருந்துவிட முடியாது.

நமது தேசியக் கொடியை உயர பறக்க வைப்பதே எங்களது இலக்காக இருந்தது. அதனால், தங்கப் பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றியைக் கொண்டாட அணியில் உள்ள அனைவரும் இரவு உணவு விருந்துக்கு செல்லவுள்ளோம். இந்தியா வந்தடைந்தவுடன் எங்களது குடும்பத்துடன் இணைந்து இந்த வெற்றியைக் கொண்டாடுவோம் என்றார்.

summary

Indian team opener Shafali Verma has spoken about winning the gold medal at the Asian Games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments