FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை வென்ற ஷஃபாலி வர்மா!

ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.

13 அக்டோபர் 2026, 4:26 pm IST
ஷஃபாலி வர்மா - படம் | AP
பகிர்:

ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன் படி, ஐசிசியின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இடம்பெற்றிருந்த இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா விருதினை வென்று அசத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஷஃபாலி வர்மா முதல் முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை வென்றார். தற்போது ஆசிய கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இரண்டாவது முறையாக சிறந்த வீராங்கனைக்கான விருதினை வென்றுள்ளார்.

Advertisement

Advertisement

ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை வென்றது குறித்து ஷஃபாலி வர்மா பேசியதாவது: ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதினை இரண்டாவது முறையாக வெல்வதை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். ஆசிய கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்காக என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அத்துடன், ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினையும் வெல்வது கூடுதல் மகிழ்ச்சி என்றார்.

கடந்த மாதம் 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷஃபாலி வர்மா 72 என்ற சராசரியுடன் 360 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடங்கும். பேட்டிங்கில் மட்டுமின்றி, பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷஃபாலி வர்மா டி20 போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தவரிசையில் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Indian opening batter Shafali Verma has won the ICC's Best Player award for the second time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments